குளிர் காலத்தில் சருமத்தை காக்கும் இயற்கை வழிகள்!
குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்காலகுறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்கால
குறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
* முழு பச்சைபயிறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து பொடித்துக் வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் கழுத்து, முகத்தில் பூசி குளித்து வந்தால், உங்கள் முகத்திற்கு எந்த அழகு க்ரீம்களும் அவசியம் இருக்காது.
* வாரம் ஒரு நாள் வேப்பிலையை அரைத்து, உடலில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் குளித்தால் தேகம் மின்னும். சரும வியாதிகள் எதுவும் உங்களை நெருங்காது. குளிர்காலத்தில் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
Advertisement
* பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும். வாரம் இருமுறை செய்தால் முகப்பருக்கள் காணாமல் போய்விடும். சருமத் துளைகள் திறந்து பாக்டீரியாக்களை அழித்து. முகப்பருக்கள் அண்டாது.
* முல்தானிமட்டியுடன் சிறிது ரோஸ் வாட்டர், எலுமிச்சைச் சாறு சில சொட்டுகள் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு தொல்லை இருக்காது.
* பொ.பாலாஜிகணேஷ்மாஸ்க் போல் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு தொல்லை இருக்காது.