தடயவியல் அறுவை ஆய்வு நிபுணராக அமலாபால்!
கேரளாவில் காவல்துறை தடயவியல் அறுவை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் உமாதாதன் எழுதிய உண்மை சம்பவங்களின்
கேரளாவில் காவல்துறை தடயவியல் அறுவை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் உமாதாதன் எழுதிய உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சென்னை திரைப்பட கல்லூரியில் பயின்ற இயக்குநர் அனூப் பணிக்கர் தயாரிக்கும் படத்தில், தமிழகத்தின் தலைமை தடயவியல் அறுவை ஆய்வு நிபுணராக பணியாற்றிய டாக்டர் பத்ரா வேடத்தில் நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக தடயவியல் அறுவை ஆய்வுகளை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னை, கோவை நகரங்களில் தொடங்கவுள்ளது.