"பாகுபலி', "பாகுபலி- 2' , "பத்மாவத்' படங்களின் இமாலய வெற்றிகளுக்குப் பிறகு இதிகாசப் படங்களுக்கு மவுசு கூடியுள்ளது. பல முறை இந்திய மொழிகளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட "மகாபாரதம்' மீண்டும் ஹிந்தியில் தயாராகிறது. திரெளபதியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் தீபிகா படுகோன்தான்.
"திரெளபதியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இது எனது "சினிமா வாழ்க்கையில்' கிடைத்திருக்கும் மிக அபூர்வமான முக்கியமான வேடம். வாழ்க்கையின் பல முகங்களை அடையாளப்படுத்துவதுடன் படிப்பினைகளையும் அழுத்தமாகப் போதிப்பது மகாபாரதம். இதுவரை எடுக்கப்பட்ட மகாபாரதம் குறித்த திரைப்படங்கள், மகாபாரதத்தில் வரும் ஆண்களின் கண்ணோட்டத்தில் காட்சிமயமாக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டப் படங்கள். நான் நடிக்கும் மகாபாரதம் திரெளபதியின் கண்ணோட்டத்தில் காட்சியாக்கப்படும். அதனால் இந்த படம் ரசிகர் ரசிகர்களின் கவனங்களைக் கவருவதுடன் தனித்தன்மை பெற்றதாக அமையும். தவிர, திரைப்படம் திரெளபதியை மையப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படும். இப்போதைக்கு இரண்டு பாகங்களாக தயாரிக்க முடிவு செய்துள்ளோம். முதல் பாகம் 2021 தீபாவளியின் போது வெளியாகும்.." என்கிறார் தீபிகா படுகோன்.
தீபிகாவின் "மகாபாரதம்' ஹிந்தி அல்லாத மொழிகளிலும் வெளியாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..!
- பனுஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.