மகளிர்மணி

மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய ரம்யா

DIN


2003-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்பட 36 படங்களில் நடித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு வெளியான "நாகரஹாவு' இவரது கடைசி படமாகும். இடையில் 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் இளைஞரணியில் சேர்ந்த ரம்யா, தனது 31-ஆவது வயதில் மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2014-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக தேசிய அளவில் செயல்பட்டுவந்த ரம்யா, இரண்டாண்டுகளாக மாண்டியா தொகுதி பக்கமே தலை காட்டாத நிலையில், சமீபத்தில் பிரஜ்வால் தேவராஜூடன் இவர் நடித்துள்ள "தில்கா ராஜா' என்ற படத்தின் டீசர் வெளியானது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிப்பதை ரம்யா தெரியப்படுத்தவில்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT