முகப்பு
மகளிர்மணி

டிப்ஸ்..  டிப்ஸ்..

பெண்​கள் சமை​யல் செய்​யும்​போது சூடான எண்​ணெய் பட்டு​விட்​டால் அந்த இடத்​தில் உரு​ளைக்​கி​ழங்​கைச் சிறிது அரைத்​துப் பூசுங்​கள். கொப்​ப​ளம் ஏற்படாது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


பெண்​கள் சமை​யல் செய்​யும்​போது சூடான எண்​ணெய் பட்டு​விட்​டால் அந்த இடத்​தில் உரு​ளைக்​கி​ழங்​கைச் சிறிது அரைத்​துப் பூசுங்​கள். கொப்​ப​ளம் ஏற்படாது.

தேவைக்கு அதி​க​மாக இஞ்சி இருந்​தால் அதை மண்​ணில் புதைத்து வைத்து தண்​ணீர் விட்டு வையுங்​கள். தேவைப்​ப​டும் போது எடுத்து உப​யோ​கிக்​க​லாம். இஞ்சி காய்ந்து போகாது.

பாகற்​காய் சீக்​கி​ரம் பழுத்​து​வி​டும். இதைத் தவிர்க்க அதை இரண்​டி​ரண்​டாக நறுக்கி வைத்து விடுங்​கள்.

உரு​ளைக் கிழங்கை உப்​புக் கரைத்த நீரில் பதி​னைந்து நிமி​டங்​கள் ஊற வைத்​து​விட்​டுப் பிறகு அடுப்​பில் வைத்​தால் சீக்​கி​ரம் அது வெந்​து​வி​டும்.

முதல்​நாள் மாலை​யில் வாங்​கிய பூ ம​று​நாள் காலை வரை​யில் வதங்​கா​மல் இருக்க, பூவை ஈரத் துணி​யில் சுற்றி வைக்​கா​தீர்​கள். ஒரு பாத்​தி​ரத்தை நன்​றா​கக் கழு​வி​விட்டு அந்​தப் பாத்​தி​ரத்​திற்​குள் பூவை வைத்து மூடி​வை​யுங்​கள். பூ வா​டா​மல் வதங்​கா​மல் வைத்த மாதி​ரியே இருக்​கும்.

ஜாம் பாட்டி​லில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்​றுங்​கள். பாட்டி​லில் ஒட்டிக் கொண்​டி​ருக்​கும் ஜாம் பாலு​டன் கலந்து கரைந்​து​வி​டும். பிறகு அந்​தப் பாலை அருந்​தி​னால் சுவை​யாக இருக்​கும். ஜாம் வீணா​காது.

முழு கட்டுரையைப் படிக்க →