""பெரும்பாலும் நாங்கள் மும்பையிலேயே இருந்ததால், சென்னை கடற்கரை பகுதியில் இருந்த என்னுடைய அம்மா ஸ்ரீதேவியின் வீடு கவனிப்பாரற்று கிடந்தது. அதை புதுப்பிக்கும் பணியை எங்களுடைய தந்தை போனிகபூர் முடிவு எடுத்திருந்ததால் இந்த ஆண்டு தீபாவளியை அப்பா மற்றும் தங்கை குஷியுடன் சென்னையில் கொண்டாட முடிவு செய்தேன். எப்போதுமே தீபாவளி, புத்தாண்டு மற்றும் பிறந்தநாளின் போது புத்தாடை உடுத்தி பளிச்சென்று இருக்க வேண்டுமென்று என் அம்மா விரும்புவார். அதன்படி தீபாவளியன்று நாங்களனைவரும் புத்தாடை உடுத்தி வீட்டிலேயே பூஜை செய்து கொண்டாடினோம். சிறுவயதில் நாங்கள் சென்னையில் அம்மாவுடன் இந்த வீட்டில் இருந்தபோது தீபாவளி கொண்டாடியதும், தெருவில் பட்டாசு வெடித்ததும் நினைவுக்கு வந்தது. இவையெல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள்'' என்கிறார் ஜான்வி கபூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.