முகப்பு
மகளிர்மணி

கதம்பம்!

தமிழ்த்திரையுலகில் ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுவதும், படம் ஹிட் ஆனால் சம்பளம் கூடுவதும், பிளாப் ஆனால் குறைவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவும் இருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:


4 கோடி சம்பளம் பெறும் நடிகை !

தமிழ்த்திரையுலகில் ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுவதும், படம் ஹிட் ஆனால் சம்பளம் கூடுவதும், பிளாப் ஆனால் குறைவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவும் இருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு பிறகு ஹீரோயின்களின் புதிய சம்பளப் பட்டியலை தயாரிப்பாளர்கள் தரப்பில் முடிவு செய்து உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

அந்த பட்டியலின்படி முதலிடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. அவருக்கு ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சம்பளம் 2 கோடி. மேலும், திரிஷா, தமன்னா, எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் 1முதல்1.50 கோடியும், கீர்த்தி சுரேஷ் 80 லட்சமும் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


நீதிபதியானகணவன் - மனைவி


சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் பதவியேற்பு நடைபெற்றது. பதவியேற்ற 10 பேரில் எஸ்.டி.தமிழ்செல்வி அவரது கணவர் கே.முரளிசங்கர் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக எஸ்.டி.

தமிழ்செல்வியும் பணியாற்றி வந்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில்.. கீழ் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்த கணவன், மனைவி ஒன்றாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல் முறையாம்.


ஆங் சான் சூகி

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும், சமீபத்தில் மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஐனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் கரோனா தொற்று காரணமாக மக்கள் ஓட்டு அளிக்க வருவார்களா என்று நினைத்த நிலையில், எதிர்பார்த்ததை விட, அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஐனநாயக கட்சி அறிவித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

−சே மெய்த்னர்

மேரி கியூரியைப் போலவே இவரும் இயற்பியல், வேதியியல் என்று இரு துறைகளிலும்சாதனைகள் புரிந்த அணு ஆராய்ச்சி அறிஞர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஜெர்மனியின் மேரி கியூரி எனப் புகழாரம் சூட்டப் பெற்றவர். பத்து முறை லிசே மெய்த்னரின் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பெற்றும் அவருக்கு அப்பரிசு கிடைக்கவில்லை.


ஹேண்ட் சானிடைசர் கண்டுபிடித்தவர்!

கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமானதாக கருதப்படுவது ஹேண்ட் சானிடைசர். இந்த ஹேண்ட் சானிடைசரை கண்டுபிடித்தவர் லத்தின் பெண்மணியான லுப் ஹெர்னான்டஸ். இவர், செவிலியருக்கான கல்லூரியில் மாணவியாக இருக்கும்போது தண்ணீரும் சோப்பும் இல்லாத சமயம் கைகளை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். அப்போது ஜெல்லையும் ஆல்கஹாலையும் இணைத்து கிருமிகளிடமிருந்து காக்கும் ஹேண்ட் சானிடைசரை 1966-இல் கண்டுபிடித்தார்.


கிசுகிசு!

திரைத்துறையில் அதிக அளவில் புழங்கும் சொல் கிசுகிசு. முற்கால ஆங்கிலத்தின் ‌g‌o‌d‌s‌i​bb என்ற சொல்லே g‌o‌s‌i​bb இன்முன்னோடி. இதற்கு நெருங்கிய உறவினர் என்று பொருள். பிற்காலத்தில் g‌o‌d‌s‌i​b​b பெண்களை மட்டுமே விமர்சிக்கும் ஒரு சொல்லானது. அது மெல்ல வளர்ந்து வாயாடிப் பெண் அல்லது புறஞ்சொல்லும் பெண்களைக் குறித்தது. பிற்பாடு மொழி வளர்ச்சியின் காரணமாக அது ‌g‌o‌ss‌i​p​ ஆனது.

முழு கட்டுரையைப் படிக்க →