ஆசிய கண்டத்திலேயே பெண்கள் தீயணைப்புப் படை பெங்களூருவில் செயலாற்றத் தொடங்கியுள்ளது. இந்தப் படையில் பதினான்கு பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி, சமீபத்தில் பெங்களூரு கெம்பகெளடா விமானநிலையத்தில் தீயணைப்பு நடவடிக்கைகளை "மாதிரி நிகழ்ச்சியாக' நடத்திக் காட்டப்பட்டது.
"தீயணைப்புப் படையில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் பணிபுரிவார்கள். அபாயம் உள்ள பணி என்பதினால் ஆண்களை மட்டுமே இந்த வேலைகளுக்குத் தேர்வு செய்து வந்தார்கள். இப்போது தீயணைப்புத் துறையிலும் பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். 2006 - இல் ஹர்ஷிணி கனேக்கர் தான் முதல் தீயணைப்பு வீராங்கனை. 2018-இல் தானியா சன்யால் இரண்டாவது தீயணைப்பு வீராங்கனையானார். சென்னை விமான நிலையத்திலும் ரம்யா ஸ்ரீகண்டன் தீயணைப்புப் படையில் இளநிலை அதிகாரியாக உள்ளார். ஆனால் பெண்கள் தீயணைப்புத் துறையில் பணி புரிவது "குறிஞ்சி மலர்' பூப்பது மாதிரி மிக அரிதாகவே நடக்கும்.
அந்த பிம்பத்தை உடைப்பதற்காக, முழுக்க முழுக்கப் பெண்கள் அடங்கிய குழு ஒன்றினைத் தொடங்க பெங்களூரு சர்வதேச நிலையத்தின் செயல் அதிகாரி தாமஸ் ஹாஃப் ஆண்டர்ஸன் முடிவு செய்தார்.
பல கட்ட தேர்வுகளில் பதினான்கு பெண்களைத் தேர்ந்தெடுத்து, ஓராண்டு காலம் தீவிர பயிற்சி அளித்து, இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவில் முதல் பெண்கள் தீயணைப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார். விமானம், விமான நிலையத்தின் அசம்பாவிதமாக ஏற்படும் தீ விபத்துகளை இந்தப் பெண்கள் படை கையாளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.