மகளிர்மணி

வாழைத்தண்டும் அதன் பயன்களும்!

வாழையில் எல்லா பகுதிகளுமே உபயோக முள்ளது தான்.   வாழைத்தண்டு, நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை பொரியல் செய்து உண்ணுவதால், மலசிக்கல் ஏற்படாது. எளிதாக ஜீரணம் ஆகக்கூடியது . 

கிரிஜா ராகவன்

வாழையில் எல்லா பகுதிகளுமே உபயோக முள்ளது தான்.   வாழைத்தண்டு, நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை பொரியல் செய்து உண்ணுவதால், மலசிக்கல் ஏற்படாது. எளிதாக ஜீரணம் ஆகக்கூடியது . 

வாழைத்தண்டு, ஜூஸ் செய்து பருகலாம். சிறு நீரகத்தில், கல் வராமல் தடுக்கவும், சிறுநீர் நன்கு பிரியவும் உதவிச்செய்யும். வாழைத்தண்டு சூப் செய்து பருகலாம். தண்டைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வடிகட்டி,  மிளகுப்பொடி, சிறிது  உப்பு வெண்ணெய் கொஞ்சம்போட்டு. சூடாக குடித்தால், மிகவும், ருசியாகவும், மணமாகவும் இருக்கும். 

வாழைத்தண்டை  பச்சையாகவே மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி உப்பும் போட்டு, எலுமிச்சம்பழச் சாறு, கொஞ்சம் விட்டு, மிளகுப் பொடி  போட்டுப் பருகலாம். 

வாழைத்தண்டுடன்,  பாசிப் பருப்பையும் சேர்த்து வேகவைத்து  தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைத்து ஊற்றி, கூட்டுப் போல் செய்து  பிசைந்து உண்ணலாம்.

வாழைத்தண்டு  நறுக்கும் பொழுது, வரும்  நார், திரி செய்து, விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு, மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT