முகப்பு
மகளிர்மணி

மருதாணியில்  இத்தனை நன்மைகளா? 

மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது  ஏராளமான  மருத்துவ குணம் கொண்டது.

Updated On : 9 செப்டம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:46 PM

மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது  ஏராளமான  மருத்துவ குணம் கொண்டது.  இதையறிந்துதான்  நம் முன்னோர்கள் இதனை பல விதத்திலும் பயன்படுத்தி  வந்துள்ளனர். மருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

மருதாணி அடிக்கடி  வைத்துக் கொண்டால் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள்  ஏற்படுவதை  தடுக்கலாம். மருதாணி  நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்குகளின் மூலம் உருவாகும் விஷக் கிருமிகளை அழிக்கிறது. 

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். அதுபோன்று அடிக்கடி மருதாணி  வைத்து கொள்பவர்களுக்கு மனநோய் ஏற்படுவதில்லையாம்.  

Advertisement

மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் பூசி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் மறையும்.

முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர போன்ற அனைத்திற்கும் மருதாணி நல்ல மருந்தாகும். அதுபோன்று மருதாணியை அரைத்து குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும். 

மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடிக்கும் என்ற  பயம் உள்ளவர்கள். மருதாணி இலைகளோடு சேர்த்து 7-8 நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து வைத்து கொண்டால்  சளித் தொந்தரவு இருக்காது. 

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவும். மருதாணி இலைகளை அரைத்து  தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் எரிச்சல் வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.