முகப்பு
மகளிர்மணி

புதிய கதாபாத்திரத்தில் தமன்னா!

திரைப்படங்களில்  அம்மன் கடவுளாக  நடிக்கும் வாய்ப்பு  சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

திரைப்படங்களில்  அம்மன் கடவுளாக  நடிக்கும் வாய்ப்பு  சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. தமிழ் திரைப்படங்களில்   கே.ஆர். விஜயா, ஜெயலலிதா அம்மனாக நடித்திருந்தனர்.  "அம்மன்' படத்தில் அம்மன் அவதாரத்தில்  ரம்யா கிருஷ்ணன்  நடித்து பாராட்டுகள் பெற்றார்.  மீனா, ரோஜாவும், "அம்மன்' வேடங்களில் நடித்த நடிகைகள் பட்டியலில்  இடம் பெறுகின்றனர். 

சென்ற  ஆண்டு (2020 ) தீபாவளியை முன்னிட்டு இணையத்தில் வெளியான "மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். 

"அம்மன்' வேடத்தை இப்போது ஏற்றிருப்பவர் தமன்னா பாட்டியா.

பொதுவாக அம்மன் வேடத்தில் நடிகைகள் நடிக்கும் போது சுத்த பத்தமாகவும், அசைவ உணவுகளையும்  சாப்பிட மாட்டார்கள். சைவ உணவைத்தான் சாப்பிடுவார்கள். 

தமன்னா மட்டும் விதிவிலக்கா என்ன? 

தண்ணீர் தெளித்து சுத்தம் செய்த  ஒரிஜினல் வாழை இலை விரித்து  இட்லி பொங்கல்  சாப்பிடும்  தமன்னா படம்  சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.  தமன்னாவின் இந்தப்  படம்  வைரலானதைத்   தொடர்ந்து தோழி நடிகைகள் தமன்னாவுக்கு  லைக் போட்டு  கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை வித்யூராமன் "தமன்னா அன்னபூரணி ஆகிவிட்டார்' என்றும் இஷா குப்தா "தமன்னா நீங்க ஒரு கடவுள் ஆயிட்டீங்க'  என்றும் கமெண்ட்  போட.. நடிகை சமந்தா ஹார்ட்டீன் போட்டதுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்.

"அம்மன்' வேடத்தில்  படத்தை வெளியிட்ட  தமன்னா  எந்தப் படத்தில் அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார் என்பதை  வெளியிடவில்லை! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.