தெலுங்கு, ஹிந்தி படவுலகில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகை பூஜா ஹெக்டேயை இன்ஸ்ட்டாகிராமில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே அறுபது லட்சத்தையும் தாண்டிவிட்டது. இந்தக் மகிழ்ச்சியில் பூஜாவுக்கு தலைகால் புரியவில்லை.
இன்னொரு சம்பவமும் பூஜாவின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அமிதாப்பச்சனுடன் பூஜா சேர்ந்து நடிப்பதுதான் அந்த உபரி மகிழ்ச்சிக்குக் காரணம்.
"இந்தியத் திரைப்படவுலகின் இமயமான அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிப்பது லேசுப்பட்ட விஷயமா... அப்படி ஒரு வாய்ப்பிற்கு நான் கனவு கண்டேன். அது இப்போது நனவாகியிருக்கிறது' என்கிறார் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே "முகமூடி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். இப்போது விஜய்க்கு ஜோடியாக "பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.