மகளிர்மணி

திடீர் ரசம் தயாரிக்க...

சி.ஆர்.ஹரிஹரன்


தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவிற்குத் தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்து தயிர் வடை செய்தால் தயிர்வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது சிறிது ஐஸ்கட்டியைச் சேர்த்து அரைத்து தேங்காய்த் துருவல் கலந்து வடை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மாங்காய்த் தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற, மாங்காய்த் தொக்கு சுவையாக இருக்கும்.

பூரி பொரிக்கும்போது எண்ணெய்யில் இரண்டு தேக்கரண்டி நெய்யைக் கலந்து பூரி செய்ய, அதன் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

கொஞ்சம் புளி கரைத்த நீரில் ஒரு தக்காளிப் பழத்தைப் பிசைந்து விட்டு சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து, சிறிது சீரகத்தை கசக்கிப்போட்டு அடுப்பில் வைத்து எடுத்தால் ஐந்தே நிமிடத்தில் திடீர் ரசம் தயார்.

சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதுடன் சீக்கிரமாக ஊசியும் போகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT