சுவையான சத்தான முருங்கைக் கீரை சூப் செய்யும் முறை
தேவையானவை:
சாம்பார் வெங்காயம்  -  4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி  - 1 ( பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை  - 1 கைப்பிடி
 அரைப்பதற்கு: 
 மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி, தனியா  -  3 தேக்கரண்டி
இஞ்சி  - சிறிய துண்டு
பூண்டு  -  5 பல், மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு  -  தேவைக்கேற்ப
செய்முறை:   அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் அரைத்து எடுத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து  பச்சை  வாசனைப் போக கொதிக்க வைக்கவும்.
பிறகு,  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி, முருங்கைக்கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும். 
( குறிப்பு: தண்ணீருக்கு பதிலாக  அரிசி கழுவிய இரண்டாவது  நீரை உபயோகப்படுத்தலாம்).
-ஏ.காந்தி,  செய்யாறு. 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.