தேவையானவை:
நெல்லிக்காய் - 20
வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - கால் கிண்ணம்
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் வேக வைத்த நெல்லிக்காய்களைச் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள, நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.