மகளிர்மணி

கத்திரிக்காய் மிளகாய்  பொடி வறுவல்

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை

தவநிதி


தேவையானவை: 

சின்ன கத்திரிக்காய் - 10
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
நல்ல எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி துருவி அறைத்தது 
கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது 
மிளகாய் பொடிக்கு: கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
மல்லி - 3 தேக்கரண்டி 
எள் - 5 தேக்கரண்டி
வரமிளகாய் - 10
மிளகு -  அரை தேக்கரண்டி
புளி கரைசல் - கால் கிண்ணம்
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி


செய்முறை: 

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை  மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டவும், அதை வாணலியில் சிறிது நல்லஎண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.

பிறகு மீதம் உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும்.

கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த மிளகாய்ப் பொடி கலவையை சீராக தூவி வெட்டி வைத்த கொத்துமல்லியை தூவி இறக்கவும். இதை கொஞ்சம் ரசம் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட  சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

SCROLL FOR NEXT