மகளிர்மணி

மொச்சை வெஜ் சுண்டல்

மொச்சைக் கொட்டையை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.

தினமணி

தேவையானவை:

மொச்சைக் கொட்டை -  அரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
மெலிதாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 2 தேக்கரண்டி
மெலிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 தேக்கரண்டி
வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 3
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1  தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
நறுக்கிய மல்லித்தழை - சிறிது

செய்முறை: 

மொச்சைக் கொட்டையை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வாணலியில்  1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த மொச்சைக் கொட்டையைச் சேர்த்து கேரட், மாங்காய், தேங்காய் சேர்த்து பொடித்த பொடியினைத்தூவி இறக்கவும். மல்லித்தழையினைச் சேர்த்து கலந்து விடவும். மொச்சைக்கொட்டை சுண்டல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT