முகப்பு
மகளிர்மணி

மின்னல் வேக வீராங்கனை!

பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயது  இளம் பெண் ஹார்மிலன் கவுர்.  இவர்,  தடகள போட்டியில்  புதிய சாதனை படைத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஹார்மிலன் கவுர். இவர், தடகள போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டாவில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட ஹர்மிலன் கவுர் 4 நிமிடம் 5 விநாடிகளில் மின்னல் வேகத்தில் ஓடி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் "இந்தியாவின் வேக ராணி' என்ற பட்டப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது.

தடகள வீராங்கனை ஹர்மிலன் கவுர் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து எட்டு தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதில் ஒரு போட்டியில் கூட ஹர்மிலன் கவுர் தோல்வியைத் தழுவவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.