உளுந்து பொங்கல்
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
தேவையானவை:
முழு உளுந்து - அரை கிண்ணம்
பச்சரிசி - ஒரு கிண்ணம்
இஞ்சி (நறுக்கியது)- சிறிது
மிளகு - தலா ஒரு தேக்கரண்டி
சீரகம், பெருங்காயத்தூள் - அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - கால் கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும். சுவையான உளுந்து பொங்கல் ரெடி.