முகப்பு
மகளிர்மணி

வினைத் தீர்ப்பவனே...!!

விநாயகர் சதுர்த்தி ஆக. 31-இல் உற்சாகமாய் கொண்டாடப்பட உள்ளது. விழா குறித்து சில ருசிகர செய்திகள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

விநாயகர் சதுர்த்தி ஆக. 31-இல் உற்சாகமாய் கொண்டாடப்பட உள்ளது. விழா குறித்து சில ருசிகர செய்திகள்.

சனீஸ்வரன் பிடிக்க முடியாத தெய்வங்கள் இருவர். ஒருவர் விநாயகர். மற்றொருவர் ஆஞ்சனேயர்.

நான்கு திருக்கரங்களைக் கொண்டு குழந்தை வடிவில் கைகளில் வாழை, மா, பலா, கரும்பு ஏந்தி காட்சி அளிப்பவரே பால கணபதி.

பிள்ளையார் சுழி:  எந்தச் செயலைச் செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போடுகிறோம். பிள்ளையார் சுழி பிரவணத்தின் குறுகிய வடிவு. சிவ சக்தி சேர்ந்த வணக்கத்துடன் தொடங்குவதைக் குறிக்கும்.  பிள்ளையார் சுழியில் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து தத்துவம் உள்ளது.  பிள்ளையார் சுழியில் போடப்படும் வட்டம் ந-காரம் .  படுக்கை கோடு ம- காரம்.  இடது வளைவு சி- காரம். பிறைமதி வ-காரம்.  பிந்து அல்லது புள்ளி ய-காரம்.

மோதக தத்துவம்: மோதகத்தின் உருவம் விநாயகரைப் போலவே இருக்கும். மூடியிருக்கும் மாவுப் பொருள் யானைப் போர்வையாகும். உள்ளே இருக்கும் பூர்ணம் பெருமானின் இனிமையான குணமாகும். இந்த அரிய குணம் கொண்ட மோதகம் 21-ஐ பெருமானுக்குப் படைத்து அவரை வணங்கினால், அவர் மகிழ்ந்து அருள்வார்.

விநாயகரின் உருவம்:  மனிதர்கள், தேவர்கள், விலங்குகள் முதலிய எல்லா உயிர்களுக்கும் விநாயகர் அருள்புரிவார்.  இதை உணர்த்தும் விதமாக அவரது உருவத்தில் இடைக்குக் கீழ் மனிதக் கூறும், இடைக்கு மேல் கழுத்து வரை தெய்வக் கூறும், அதற்கு மேல் விலங்கு கூறும் அமைந்து காணப்படுகிறார்.

விநாயகரின் அமர்ந்த கோலம்: விநாயகர் காலை மடித்து அமர்ந்த கோலம் அகரம். தலையும் துதிக்கையும் உகரம்.  வயிற்றுப் பகுதி மகரம். விந்து, நாதம் ஆகிய இரண்டும் விநாயகரின் உருவத்தில் விளையாடுகின்றன.  குண்டலினி ஊர்தியாகும். பாசம் அறுப்பது பாச அங்குசம். ஏழு உலகங்களுக்கும் கொழுக்கட்டை மந்திரச் சாதனையாகும். நான்கு திருக்கரங்களும் அறம், பொருள், இன்பம், வீடு அளிக்கும் தன்மையுடையன. முக்கண்களில் நடுக்கண் ஞானக்கண்ணாகும். மற்ற இரு கண்களும் சூரிய, சந்திரர் ஆகும்.

நரசிம்ம பல்லவனின் முதன் மந்திரி பரஞ்சோதியே பின்னாளில் சிறுதொண்டர் என்ற பெயர் பெற்றார். இவரே வாதாபியிலிருந்து கணபதியை எடுத்துவந்து, திருச்செங்கட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →