முகப்பு
மகளிர்மணி

மருத்துவக் குறிப்புகள்..

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்துக்கு 2 முறை உட்கொண்டு வர விரைவில் குணமாகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:


அல்சர் குணமாக இயற்கை வீட்டு வைத்திய மருத்துவக் குறிப்புகள்:

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்துக்கு 2 முறை உட்கொண்டு வர விரைவில் குணமாகும்.

சாதத்தில் தினமும் தேங்காய் பால் சேர்த்துகொண்டால், வயிற்றுப் புண் குணமாகும். மேலும், கொப்பரைத் தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

வேப்பிலையை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர அல்சர், வயிற்று பிரச்னைகளும் நீங்கிவிடும்.

அல்சருக்கு அகத்திக் கீரை நல்லது. தினமும் ஒரு கிண்ணம் அகத்திக் கீரையை சமைத்து உள்கொண்டு வர, விரைவில் குணமாகிவிடும்.

சீரகம், அதிமதுரம், தென்னம்பாளைப் பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்து பருகலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →