மகளிர்மணி

தேசிய  சைக்கிள்  போட்டியில்  சாதனை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேவுள்ள கீழ முடி மண் கிராமத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் தாயம்மாள் தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீமதி. புதியம்புத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித

DIN


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேவுள்ள கீழ முடி மண் கிராமத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் தாயம்மாள் தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீமதி. புதியம்புத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மாணவி ஸ்ரீமதி தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்துள்ள மாணவி ஸ்ரீமதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற மாணவி ஸ்ரீ மதி கூறுகையில், "13 வயதில் இருந்தே சைக்கிள் போட்டியில் பங்கேற்று வருவதாகவும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசு அளித்ததன் மூலம் பதக்கங்களை வெல்ல உறுதுணையாக இருந்ததாகவும்' தெரிவித்தார்.

ஆசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி ஸ்ரீமதி அந்தப் போட்டியிலும் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைப்பார் என அவரது தாய் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT