முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: தொடரில் இருந்து விலகும் நடிகைகள்!

சமீபகாலமாக சின்னத்திரை தொடர்களில்  நடித்து வரும் நாயகிகள், நாயகர்கள் அவ்வப்போது   தொடரில் இருந்து  விலகுவது  இயல்பாகி வருகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:


சமீபகாலமாக சின்னத்திரை தொடர்களில்  நடித்து வரும் நாயகிகள், நாயகர்கள் அவ்வப்போது   தொடரில் இருந்து  விலகுவது  இயல்பாகி வருகிறது.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  வரும்  "பாரதி கண்ணம்மா' தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்தத் தொடரில் "அகில்' கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் நடிக்க முடியவில்லை என்று  விலகினார்.

அவரைத் தொடர்ந்து இந்தத் தொடரின் நாயகியாக நடித்து வந்த ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகினார்.  ஆனால், விலகல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் சமீபத்தில், "குக் வித் கோமாளி சீசன்  3'-இல் குக்காகியிருக்கிறார்.

இந்நிலையில்,  இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் வந்த ஸ்வீட்டி தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், சமீபத்தில், ஜீ தமிழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "சூப்பர் குயின்' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஜீ தமிழில் புதியதாக ஒரு தொடரில் அவர் கமிட் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  சீரியல் விலகல் குறித்தும், புதுத்தொடர் குறித்தும் ஸ்வீட்டி இதுவரை அதிகார பூர்வமாக  எதுவும்  அறிவிக்கவில்லை. 

அதேபோன்று  சன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  "பூவே உனக்காக' தொடரில் நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா இந்தத் தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரியானார். பிறகு, திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகியவர் தற்போது சன் டிவியில் "அருவி' என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது தவிர, ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அருண் என்பவரும் சீரியலில் இருந்து விலகினார். 

இந்நிலையில், தற்போது, இத்தொடரில் நாயகியாக நடித்துக் வந்த ராதிகா ப்ரீத்தி அந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். 

தனது விலகல் குறித்து ராதிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார், "கனத்த இதயத்தோடு "பூவே உனக்காக' தொடரில் இருந்து விலகுவதை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். வாய்ப்பு கொடுத்த சன் டிவிக்கும், தயாரிப்பு தரப்புக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிப்படிகளில் என்னுடன் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்' என தெரிவித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.