முகப்பு
மகளிர்மணி

பனங்கிழங்கு அல்வா

பனங்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, வாணலியில் 2  தேக்கரண்டி நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:


தேவையானவை:

பனங்கிழங்கு - 4
ஜவ்வரிசி விழுது - 2 கிண்ணம் 
(ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்)
சர்க்கரை - 3 கிண்ணம்
ஏலக்காய்த் தூள்-  ஒரு தேக்கரண்டி முந்திரி, பாதாம், உலர்திராட்சை
நெய்  -  தேவைக்கேற்ப

செய்முறை: 

பனங்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, வாணலியில் 2  தேக்கரண்டி நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஜவ்வரிசி விழுது சேர்த்துக் கலந்து, சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். தேவையான நெய் ஊற்றி மேலும் கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.