முகப்பு
மகளிர்மணி

பனங்கிழங்கு லட்டு 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

தேவையானவை

பனங்கிழங்கு -   4
தேங்காய்த் துருவல் -   2  தேக்கரண்டி
வெல்லப்பொடி  -  50 கிராம்
முந்திரி, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப
ஏலக்காய், சுக்கு பொடி -  சிறிது

செய்முறை: 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விடவும். பின் கிழங்கை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி நார் நீக்கி தனியே வைக்கவும். நறுக்கிய துண்டுகளை நன்கு காயவிடவும். இரண்டு நாள் காய்ந்த பின் இதனை,

வெல்ல பொடி,முந்திரி, கிஸ்மிஸ் உடன்  மிக்ஸியில்  இட்டு கொரகரப்பாக அரைக்கவும். இந்த பொடியுடன் ஏலக்காய், சுக்கு  பொடி சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும். இந்த லட்டு எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.