மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

ஆர். ஜெயலட்சுமி

இருமல், கபம், ஜூரம் என எல்லாம் சேர்த்து ஜலதோஷம் படுத்துகிறதா? சித்தரத்தை, அதிமதுரம், அரிசி, திப்பிலி, மிளகு, சுக்கு- இந்த ஐந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்து எடுக்க வேண்டும். "பொறு பொறு'வென்று சத்தம் கேட்டதும், வாணலியில் போட்டவற்றை எடுத்து பொடி செய்ய வேண்டும். இரண்டு டம்ளர் நீரில் பொடி செய்தவற்றை நான்கு மேஜை கரண்டி அளவு சேர்த்து காய்ச்ச வேண்டும். மொத்தக் கலவையும் அரை டம்ளர் அளவுக்குச் சுண்டியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் உடனே தீரும்.

*விரலி மஞ்சளைச் சிறிதாகச் சீவிவிட்டு, அதை சந்தனக் கட்டையில் நீர்விட்டு உரசி, விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சாதாரண வெள்ளைச் சுண்ணாம்பை சிறிது கலந்து ஒரு மேஜை கரண்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.  நல்லெண்ணெய் விளக்கு பற்ற வைத்து, அந்தத் தீபத்தின் மேல் விழுது வைத்த கரண்டியைக் காட்டி சிவப்பாக வரும்வரை சூடு செய்ய வேண்டும். சிவப்பாக வந்தவுடன் அதை எடுத்து மூக்கு, நெற்றி எனத் தேய்த்துவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். ஜலதோஷம் உடனே தீரும்.

*விரலி மஞ்சளைப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் புதிய வேப்பிலையைச் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு வேக வைத்து, நன்றாகக் கொதித்தவுடன் வரும் ஆவியில் ஆவி பிடித்தால், சைனஸýம் ஜலதோஷமும் ஓடியே விடும். ஆவி பிடிக்கும்போது, யூகலிட்டஸ் ஆயிலை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

*சிறிய வெங்காயத்தின் காய்ந்தத் தோடுகளைச் சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி, தூங்கும்போது பயன்படுத்தினால் சைனஸ் தீரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

SCROLL FOR NEXT