முகப்பு
மகளிர்மணி

உருளைக்கிழங்கு சீஸ் போண்டா

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

Updated On : 16 மார்ச், 2022 at 6:00 AM
பகிர்:


தேவையானவை :

உருளைக்கிழங்கு -  கால் கிலோ,
பச்சைப்பட்டாணி - 3 தேக்கரண்டி
சீஸ் துருவல் -  அரை கிண்ணம்
எலுமிச்சைப்பழச்சாறு -  அரை பழம்
வெங்காயம் - 3
நறுக்கிய பச்சைமிளகாய் - 4
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
மேல் மாவிற்கு...
கடலை மாவு - 1 கிண்ணம்
உப்பு - சிறிது
சமையல் சோடா - 1 சிட்டிகை
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது
அரிசி மாவு - கால் கிண்ணம்


செய்முறை :

Advertisement

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலை மாவுடன் சமையல் சோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, சீஸ் துருவல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெய்யில் பொரித் தெடுத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.