முகப்பு
மகளிர்மணி

முதல் பெண் ஓதுவார்!

செங்கல்பட்டு  மாவட்டம்,  மாடம் பாக்கத்தில்  உள்ள தேனு புரீஸ்வரர்  கோயில்  ஓதுவாராக  சுகாஞ்சனா என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

செங்கல்பட்டு  மாவட்டம்,  மாடம் பாக்கத்தில்  உள்ள தேனு புரீஸ்வரர்  கோயில்  ஓதுவாராக  சுகாஞ்சனா என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம்  தமிழ் நாட்டின்  முதல் பெண் ஒதுவார்  என்னும் பெருமையை  இவர் பெற்றுள்ளார்.

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள சுஹாஞ்சனாவுக்கு  28 வயது.  இவருக்கு சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம்.  தற்போது தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் வசித்து வருகிறார்.

இது குறித்து  சுஹாஞ்சனா கூறுகையில், ""சிறு வயதில் இருந்தே பக்தி நெறியிலேயே என்னை பெற்றோர்  வளர்த்தனர். நவராத்திரி விழாவுக்கு செல்லும்போது அங்கு சிலர் பாடுவதைக் கேட்டு நாமும் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டேன். கோயில் விழாக்கள், உறவினர்கள் முன்னிலையில் பாடுவது என செயல்பட்டேன். காலப்போக்கில் அது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. எனவே, இசைப்பள்ளியில் படித்து தேவாரம், திருவாசகம் பாடல்களைப் படித்தேன். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே அவற்றை ஆர்வமாக கற்றுக் கொண்டேன். இறைவன் முன்பு பாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது'' என்கிறார் சுஹாஞ்சனா.

முழு கட்டுரையைப் படிக்க →