மாடல் அழகியானார்!
கோயில் திருவிழா ஒன்றில் பலூன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், ஒரே புகைப்படத்தில் மாடலாக மாறியுள்ளார்.
கோயில் திருவிழா ஒன்றில் பலூன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், ஒரே புகைப்படத்தில் மாடலாக மாறியுள்ளார். ஆம், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆண்டலூர் காவு திருவிழாவில் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் கிஸ்பு என்ற இளம் பெண்.
இதனை அந்த திருவிழாவுக்கு வந்திருந்த புகைப்பட கலைஞரான அர்ஜுன் கிருஷ்ணன் என்பவர், படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த படம் இணையத்தில் வைரலானது.
இதனை கண்ட , ஒப்பனைக் கலைஞரான ரம்யா பிரஜூ, கிஸ்புவை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கிஸ்பு மற்றும் அவரது தாயிடம் பேசி அனுமதி வாங்கி, போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ரம்யாவின் கைவண்ணத்தில், பாரம்பரிய புடவை, நகைகளுடன் ஜொலித்த கிஸ்புவை, அர்ஜுன் கிருஷ்ணன் விதவிதமாக படம் பிடித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது கிஸ்புவின் மாடலிங் போட்டோஸ் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.