முகப்பு
மகளிர்மணி

கேரட் வடாம்

ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஜவ்வரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

Updated On : 8 மே, 2022 at 5:08 PM
பகிர்:

தேவையானவை:

ஜவ்வரிசி- 100 கிராம்
கேரட்- 100 கிராம்
பச்சை மிளகாய்- 5
எலுமிச்சைப் பழம்- பாதியளவு
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி
உப்பு- தேவையானது


செய்முறை: 

Advertisement

ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஜவ்வரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். துண்டுகளாக்கிய பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, கூழாகக் காய்ச்சி கீழே இறக்க வேண்டும். வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழை ஒரு கரண்டியில் வட்ட, வட்டமாக ஊற்றி காய வைக்க வேண்டும். பின்னர், துணியில் உரித்து எடுத்து வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.