முகப்பு
மகளிர்மணி

தோடா பர்ஃபி (பஞ்சாப்)

வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும். இத்துடன் கோதுமை ரவையை சேர்க்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா- 10
கோதுமை மாவு- கால் கிண்ணம்
கோதுமை ரவை- 1 கிண்ணம்
நெய்- அரை கிண்ணம்
கோகோ பவுடர்- 2 சிறிய கரண்டி
சர்க்கரை - ஒன்றரை கிண்ணம்
கெட்டியான பால்- 2 லிட்டர்
எலுமிச்சை சாறு- 4 தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும். இத்துடன் கோதுமை ரவையை சேர்க்கவும். நன்கு வறுபட்டதும் சர்க்கரையை சேர்க்கவும்,. சர்க்கரை உருகி வரும்போது, அடுப்பை அணைக்கவும். பாலை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிடவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். பால் உடையும்போது,  வறுத்த கோதுமை ரவை சேர்த்து, கிளறவும். இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். பொடியாக அளித்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலாகச் சேர்க்கவும். 3 மணி நேரம் கழித்தவுடன் வில்லைகளை போடவும்.

முழு கட்டுரையைப் படிக்க →