மக் மல் பூரி (ஆக்ரா)
பாதாம், பிஸ்தாவை கரகரப்பாகப் பொடித்து, குங்குமப்பூ, பால்கோவா சேர்த்து கலக்கவும்.
மைதா- 1 கிண்ணம்
பிஸ்தா, பாதாம்- 10
உப்பு- சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய்-
தேவையான அளவு சர்க்கரை- 1 கிண்ணம்
குங்குமப்பூ- 2 சிட்டிகை
பால்கோவா- அரை கிண்ணம்
செய்முறை:
பாதாம், பிஸ்தாவை கரகரப்பாகப் பொடித்து, குங்குமப்பூ, பால்கோவா சேர்த்து கலக்கவும். மைதாவுடன் சிட்டிகை உப்பை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறிய பூரிகளாகத் திரட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பிப் பதம் வரை காய்ச்சவும். பொரித்த பூரிகளை பாகில் தோய்த்து, பாதாம் கலவை உள்ளே வைத்து மடித்து தட்டில் எடுக்கவும். ஆக்ரா ஸ்பெஷல் மக்மல் பூரி தயார்.