அங்கூரி கேசர் பேட்டா (ராஜஸ்தான்)
பாதாம் ஊறவைத்து, தோல் எடுத்து மெலிதாக சீவிக் கொள்ளவும். பூசணிக்காயின் தோல், குடல் பகுதியை சுத்தம் செய்யவும். ஐஸ்க்ரீம் எடுக்கும் கரண்டியில் உருண்டைகளாக எடுக்கவும்.
தேவையான பொருள்கள்:
கெட்டியான வெள்ளைப் பூசணி- 1 கிலோ
சர்க்கரை- 2 கிண்ணம்
குங்கமப்பூ- 2 சிட்டிகை
சுண்ணாம்பு- 1 சிட்டிகை
பாதாம்- 10
செய்முறை:
பாதாம் ஊறவைத்து, தோல் எடுத்து மெலிதாக சீவிக் கொள்ளவும். பூசணிக்காயின் தோல், குடல் பகுதியை சுத்தம் செய்யவும். ஐஸ்க்ரீம் எடுக்கும் கரண்டியில் உருண்டைகளாக எடுக்கவும். (முடியாவிட்டால் ஒரு அங்குல சதுரங்களாக நறுக்கவும்). இதை முள்கரண்டியால் குத்திவிடவும்.
2 கிண்ணம் தண்ணீரில் சுண்ணாம்பு சேர்த்து, கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, பூசணித்துண்டங்கள் சேர்த்து மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, நீரை வடிக்கவும்.
அரை கிண்ணம் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, 1 கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். குங்குமப்பூ சேர்க்கவும். அடுப்பை அணைத்து, பூசணித் துண்டுகள் சேர்த்து உடனே எடுத்து தட்டில் அடுக்கவும். பாதாம் அலங்கரித்து பரிமாறவும்.