முகப்பு
மகளிர்மணி

பூண்டு ஊறுகாய் 

பூண்டின் தோலை முழுவதுமாக நீக்கி, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அதை பெரிய பாத்திரத்தில் போட்டு, ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும்.

Updated On : 27 நவம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:27 PM

தேவையான பொருள்கள்:

சிறு பூண்டு -1 கிலோ 
மஞ்சள்தூள்- 4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த் தூள் - 8  தேக்கரண்டி
வறுத்த வெந்தயப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -  தேவையான அளவு
எலுமிச்சை - 3
நல்லெண்ணெய் - 1 கிண்ணம்

செய்முறை: 

Advertisement

பூண்டின் தோலை முழுவதுமாக நீக்கி, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அதை பெரிய பாத்திரத்தில் போட்டு, ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து பூண்டு, மசாலா கலவையில் சேர்த்து நன்றாகக் கலந்து, இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும் . சுவையான பூண்டு ஊறுகாய் தயார். இதை பிரிட்ஜில் வைத்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.