தீபாவளி லேகியம்
சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், தனியாவை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:08 PM
தேவையான பொருள்கள்:
சீரகம்- ஒன்றரை தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
சுக்குப் பொடி- 1 தேக்கரண்டி
கிராம்பு- ஒன்றரை தேக்கரண்டி
ஏலக்காய்- ஒன்றரை தேக்ரண்டி
தனியா- 1 தேக்கரண்டி
கல்கண்டு- 50 கிராம்
திராட்சை-50 கிராம்
நெய்- 1 மேசைக்கரண்டி
தேன்- 1 மேசைக் கரண்டி
செய்முறை:
Advertisement
சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், தனியாவை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். இவற்றை பொடித்துக் கொள்ளவும். கல்கண்டை நைஸாக அரைக்கவும். திராட்சையை நன்றாக இடித்துக் கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும், சுக்குப் பொடியுடன் மேலே சொன்ன அனைத்தையும் தேன், நெய் சேர்த்து பிசைந்தால் தீபாவளி லேகியம் தயார்.