முகப்பு
மகளிர்மணி

ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல்  

முதலில் ஜவ்வரிசி, பாசிப்பருப்யை நன்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நன்கு வேகவிடவும்.

Updated On : 30 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

தேவையான பொருள்கள்: 

ஜவ்வரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை -100 கிராம்,


செய்முறை: 

Advertisement

முதலில் ஜவ்வரிசி, பாசிப்பருப்யை நன்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நன்கு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் வெக வைத்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, சேர்த்துக் கிளறி இறக்கவும். 

சத்துகள் நிறைந்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.