முகப்பு
மகளிர்மணி

கஸ்தூரி வடை (தமிழ்நாடு)

துவரம் பருப்பை ஊற வைத்து, நீரை வடிக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு, ரவை- தலா அரை கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகு- 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள், எள்- தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய்- 3 

செய்முறை: 

துவரம் பருப்பை ஊற வைத்து, நீரை வடிக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் பெருங்காயத் தூள், ரவை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

சூடான எண்ணெயில் வடைகளைப் போட்டு, மொறு மொறுவென பொரித்து புதினா சட்னியுடன் பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →