மகளிர்மணி

வெள்ளரி விதைப் பாயசம்

பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வெள்ளரி விதை 200 கிராம்
ஏலக்காய் 5
குங்குமப்பூ சிறிதளவு
பால் 500 மி.லி.
அரிசி மாவு 2 தேக்கரண்டி
சர்க்கரை 250 கிராம்
சாரைப் பருப்பு4
பாதாம் பருப்பு4
முந்திரிப் பருப்பு 5
திராட்சை 4
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
நெய் 25 கிராம்

செய்முறை: 

பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். பிறகு பாலைவிட்டு கொதிக்க வைத்து சர்க்கரையைப் போட்டு கரைய விட வேண்டும். 
குங்குமப்பூவையும், அரிசி மாவையும் கரைத்துவிட்டு ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, சாரைப் பருப்பு, திராட்சை வறுத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT