வரகரிசி அதிரசம்
வரகரிசியை ஊற வைத்து சுத்தம் செய்து, வடித்து உலர வைக்கவும்.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM
தேவையானவை:
வரகரிசி- 1 கிண்ணம்
வெல்லம்- முக்கால் கிண்ணம்
நெய்- கால் தேக்கரண்டி
எள்- சிறிதளவு
தயிர்- 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்- அரை தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை;
Advertisement
வரகரிசியை ஊற வைத்து சுத்தம் செய்து, வடித்து உலர வைக்கவும். வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, தக்காளிப் பழப்பாகு பதத்தில் எடுத்து இறக்கி வைத்து, அரைத்த மாவு, எள், நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் சற்று கனமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.