முகப்பு
மகளிர்மணி

கறிவேப்பிலை தோசை

கறிவேப்பிலை தோசை செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

Updated On : 6 ஆகஸ்ட், 2023 at 12:00 AM
பகிர்:


தேவையான பொருள்கள் :

புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சரிசி - 2 கிண்ணம்
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

Advertisement

கறிவேப்பிலை தோசை செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும், அரிசி, மிளகாய் வற்றல், சீரகம், உப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, அதில் கரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தால் சுவையான கறிவேப்பிலை தோசை தயார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.