பாட்டி வைத்தியம்
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நோயில் குணம் அடைந்தவர்கள் தேனை ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், விரைவாக உடல் பலம் பெறும்.
நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் உடலுக்கு பலம் கூடும்.
இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி, மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
நல்லெண்ணையில் தும்பைப் பூவைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால் தலைபாரம் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடித்தால் கண் நோய் ஏற்படாது.
பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் இருமல் மட்டுப்படும்.