காளான் புலாவ்
அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியன சேர்த்து அரைக்கவும்.
தேவையான பொருள்:
பாசுமதி அரிசி - ஒரு கிண்ணம்
மொட்டுக்காளான் - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது-கால் தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கிண்ணம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லிஇலை - சிறிதளவு
ஊற வைத்த பட்டாணி - கால் கிண்ணம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகாய் தூள் - அரைதேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால்தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியன சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்னர், அரைத்த விழுது, மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அரிசி, காளான், பட்டாணி, உப்பு, ஒன்றரை கிண்ணம் தண்ணீர்விட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.