முகப்பு
மகளிர்மணி

கஸ்டர்டு பொங்கல்

அரிசி, பயறு, கடலைப் பருப்பு ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்து மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு போட்டு குக்கரில் வைத்து வெந்து இறக்க வேண்டும்.

Updated On : 15 ஜனவரி, 2023 at 6:00 AM
பகிர்:

தேவையானவை:

பச்சரிசி- 200 கிராம்
முளை கட்டி பச்சைப் பயிறு- 50 கிராம்
கடலைப் பருப்பு- 50 கிராம்
தேங்காய்ப் பால்- 100 கிராம்
வெல்லம்- 100 கிராம்
கஸ்டர்டு பவுடர்- 50 கிராம்
திராட்சை- 10
முந்திரி- 10
நெய்- 50 கிராம்
அன்னாசிப் பழம், பேரீச்சம் பழம், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

அரிசி, பயறு, கடலைப் பருப்பு ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்து மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு போட்டு குக்கரில் வைத்து வெந்து இறக்க வேண்டும். வெல்லத்தைப் பிறகு காய்ச்சி வாசனை வந்தவுடன் இறக்கி, பொங்கலில் கலந்து தேங்காய்ப் பாலில் கஸ்டர்டு பவுடரை கரைத்து சேர்க்க வேண்டும். முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பை நெய்யில் போட்டு வறுத்துப் போட வேண்டும். அன்னாசி, பேரீச்சம் பழத்துண்டுகளைப் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.