முகப்பு
மகளிர்மணி

புடலங்காய் உசிலி

கடலைப் பருப்பு, துவரம் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து சீரகம், மிளகாய் வத்தல் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும்.

Updated On : 17 ஜூன், 2023 at 9:51 PM
பகிர்:

தேவையானவை:

புடலங்காய் 3
கடலைப் பருப்பு100 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
சீரகம் 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் 1 மேசைக்கரண்டி
மிளகாய் வத்தல்  6
வெங்காயம் 3
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் தேவையானவை

செய்முறை: 

Advertisement

கடலைப் பருப்பு, துவரம் பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து சீரகம், மிளகாய் வத்தல் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். பின்பு, ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை இவைகளைப் போட்டு வரமிளகாய் போட்டு தாளித்து பொடிதாக நறுக்கிய புடலங்காயைப் போட்டு சேர்த்து வதக்க வேண்டும். குக்கரில் அரைத்த மசாலாவை வைத்து தட்டு போட்டு மூடி கால் மணி நேரம் வேக வைத்து இறக்கி ஆறியதும் உதிர்ந்து புடலங்காயுடன் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.