மகளிர்மணி

அடுப்பறை...அலப்பறை

DIN

"என்னம்மா.. தோசை ரவுண்டா இல்லாம,  இப்படி ஓவல் சைஸில் இருக்கு!''
"இது முட்டை தோசைங்க!''

"பூ மாதிரி இட்லி இல்லாவிட்டாலும், சட்னி அப்படி இருக்கு உஷா!''
"என்னங்க உளர்றீங்க?''
"உளறலைம்மா. கோயில் பூசாரி கொடுத்த தேங்காயை வச்சு அரைச்ச சட்னி பூ வாடை அடிக்குதுன்னு சொன்னேன்!''
-வி.ரேவதி,  தஞ்சை.

"தினமும் ஒரு மசால் வடை வைக்கிறேன். ஆனா பொறியில் எலி விழ மாட்டேங்குதே?''
"சைடு டிஷ் ஏதாவது வையுங்க. விழுந்துடும்!''
- நாகராஜன்,  பம்மல்.

"என்னங்க. சமையல் கட்டுல தீயுற வாசனை அடிக்குது!''
"மூக்குப் பொடி போடப் போனேன். அதுக்குள்ளாற தீஞ்சு போச்சு போல. சாரி டார்லிங்''
-ஐ.லட்சுமி மணிவண்ணன்,  நாகை.

"என்னடீ. இந்த மெஸ்ஸில் வீட்டுமுறை சமையல் போட்டிருக்கு. அப்படியொன்று தெரியலையே?''
"என்னங்க. சாப்பாட்டுல முடி இருக்கு பாருங்க!''
-துடுப்பதி வெங்கண்ணா,  பெருந்துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரமத்தி அருகே பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

கோயில் திருவிழாவில் போலீஸாரை தாக்கிய 15 போ் மீது வழக்குப் பதிவு

போலி வாகன உதிரிபாகங்கள் விற்பனை! நுகா்வோருக்கு ரூ. 40,000 இழப்பீடு: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT