முகப்பு
மகளிர்மணி

நேந்திரப்பழ பூரி

நேந்திரப்பழ பூரி செய்வதற்கு முதலில் நேந்திரப்பழம், பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.

Updated On : 22 அக்டோபர், 2023 at 6:31 PM
பகிர்:

தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு  3 கிண்ணம்
நேந்திரப்பழம் கனிந்தது  கிண்ணம்
பேரிச்சம்பழம்  6
வெல்லம்  சிறிதளவு 
நெய்  தேவையான அளவு 
ஏலக்காய்த்தூள்  சிறிதளவு 
எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை :

Advertisement

நேந்திரப்பழ பூரி செய்வதற்கு முதலில் நேந்திரப்பழம், பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் நேந்திரப்பழம், பேரிச்சை சேர்த்து அரைத்து வைத்த கலவை, வெல்லம், ஏலக்காய் பொடி, தேவையான அளவு நெய் ஆகியவற்றை சேர்த்து பூரி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வட்டமாக தேய்த்து போட்டு பொரித்து எடுத்தால் சுவையான நேந்திரப்பழ பூரி ரெடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.