அவல் பாயசம்
பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
தேவையான பொருள்கள் :
அவல் - ஒரு கிண்ணம்
காய்ச்சிய பால் - ஒரு கிண்ணம்
வெல்லத் தூள் - தேவையான அளவு,
ஏலக்காய்த் தூள் - சிட்டிகை
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - தலா 10
செய்முறை:
பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலைச் சேர்த்து வேக விடவும். பிறகு பால், ஏலக்காய் த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.