இனிப்பு அவல்
அவலுடன் தண்ணீர்விட்டு அலசி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும் .
தேவையான பொருள்கள் :
கெட்டி அவல் - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
செய்முறை:
அவலுடன் தண்ணீர்விட்டு அலசி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும் . பாத்திரத்தில் ஊறவைத்த அவலுடன் ஏலக்காய்த் தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும். இனிப்பு அவல் தயார்.