மகளிர்மணி

மாங்காய் துவையல்

மாங்காயை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

மாங்காய் 1

தேங்காய்த் துருவல் 1 கிண்ணம்

பச்சை மிளகாய், வற்றல்

மிளகாய் தலா 2

கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 மேசைக்கரண்டி

பெருங்காயம், வெந்தயம் தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வற்றல் மிளகாய், வெந்தயம் இவைகளைச் சிவக்க வறுத்துக் கொண்டு இறக்கவும். அப்போது, பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். தேங்காய்த் துருவல், மாங்காய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து, கடைசியில் வறுத்து வைத்துள்ள சாமான்களைச் சேர்த்து கலந்து அரைக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. துவையல் கெட்டியாக இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் ஆயுதம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: திரிணமூல் எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

உணவக ஊழியரைத் தாக்கியவா் கைது

சா்வதேச நடனப் போட்டி: பல்லடம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் கட்சிகள்: உள்துறை இணையமைச்சர்

SCROLL FOR NEXT