முகப்பு
மகளிர்மணி

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பாலைக் காய்ச்சி வெது வெது சூட்டில் சிறிதளவு தயிரை ஊற்றி, இரவு முழுவதும் வைத்தால் காலையில் தயிர் ரெடி. இனி இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.

Updated On : 15 டிசம்பர், 2024 at 12:00 AM
தயிர் - Picasa
பகிர்:

பாலைக் காய்ச்சி வெது வெது சூட்டில் சிறிதளவு தயிரை ஊற்றி, இரவு முழுவதும் வைத்தால் காலையில் தயிர் ரெடி. இனி இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.

தயிரில் கால்சியம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவுகிறது. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடுகிறது.

நூறு கிராம் தயிரில் 98 கலோரி உள்ளது. புரதம், கொழுப்பு, வைட்டமின்-பி12, வைட்டமின்-டி, லாக்டிக் அமிலம் என பல உள்ளன. புரோபயோடிக் குடல் ஆரோக்கியத்துக்கும், வைட்டமின் பி-12 ரத்த சிவப்பு அணு உற்பத்தி, நரம்புச் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.

Advertisement

வைட்டமின்-டி எலும்பை வலுப்படுத்தி, ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது. லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, அதன் அழகை கூட்டுகிறது.

தயிர் பெண்களைப் பொருத்தவரை ஒரு ஹேர் கண்டிசனர்.

ஆனால், தயிரைத் தவிர்க்க வேண்டியவர்களும் உள்ளனர். உடலில் அதிக கொழுப்புச் சத்து உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. மூட்டு வலி உள்ளவர்கள் அளவாய் சாப்பிட வேண்டும். வயிற்றில் பிரச்னை உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடாமல் மோராக சாப்பிடலாம். சிலருக்கு பால் பொருள்கள் ஏற்காது. ஜீரணிக்கச் சிரமப்படுவர்

களுக்கு தயிர் சாப்பிட வேண்டாம். சிலருக்கு இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும்.

தயிர் சாப்பிட்டால் சிலருக்கு வீக்கம், வயிற்று வலி ஏற்படும். அவர்களும் தவிர்க்க வேண்டும்.

அதேசமயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். தயிர் சிலருக்கு போதும் என்ற மன நிலையைத் தந்து, எடை குறைப்புக்கு வழிசெய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.